புலிகளுக்கு எதிரான 150 பிடியாணைகளை ரத்துச் செய்த நல்லாட்சி!

0
71

நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள் ரத்துச் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

கடந்த 04ம் திகதி துபாயில் வைத்து ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச சிவப்பு அறிக்கை பிடியாணை அடிப்படையில் கைது செய்து இலங்கை கொண்டு வர அரசாங்கம் முயற்சி செய்தது.

2006ம் ஆண்டு உக்ரைன் அரசாங்கத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானக் கொள்வனவில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகவும், குறித்த ஊழல் மோசடிகளில் உதயங்க வீரதுங்கவுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அவரை துபாயில் வைத்துக் கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

அவருக்கு எதிராக இன்டர்போல் பொலிசாரின் சிவப்பு அறிக்கை எனப்படும் ரெட்நோட்டீஸ் வௌியிடப்பட்டிருக்கவில்லை என்று துபாய் பொலிசார் கைவிரித்து விட்டனர்.

எனினும் தற்போது அவருக்கு எதிராக சிவப்பு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள நிதிமோசடிப் பிரிவு பொலிசார் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தனக்கு எதிராக சிவப்பு அறிக்கை பெற்றுக் கொள்ள முனையும் நல்லாட்சி அரசாங்கம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சுமார் 150 சிவப்பு அறிக்கைகளை ரத்துச் செய்துள்ளதாக உதயங்க வீரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

பாரிய தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here