கடவுளின் எச்சரிக்கையா? அழிவிற்கான அறிகுறியா? – பீதியில் மக்கள்!

0
139

சீனாவில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் வானில் பிரகாசமாக தோன்றிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.

(திங்கற்கிழமை) காலை சுமார் 8.30 மணியளவில் சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹைலுன் நகரத்தின் வான்பரப்பில், நடுவில் ஒரு பிரகாசமான சூரியனும் அதற்கு இரு பக்கங்களிலும் இரு பிரகாசமான ஒளிகளும் வட்ட வடிவில் தோன்றியுள்ளன.

15 நிமிடங்கள் வரையிலும் இவ்வாறான காட்சி வானில் தோன்றியதை பிரதேசவாசிகள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர். இதுபோன்றதொரு நிகழ்வை இதற்கு முன்னர் அவதானித்ததில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் 2017ஆம் ஆண்டு உலகம் பாரிய அழிவுகளைச் சந்திக்கும் என எதிர்வுகூறல்கள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மூன்று சூரியன்கள் போன்ற வான்மாயைக் தோன்றியதையும் உலகஅழிவுடன் தொடர்புபடுத்தி மேலைத்தேய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

எனினும் வளிமண்டல வெப்பநிலை, மேகங்களின் நீராவித்தன்மை போன்ற காரணங்களினால் சூரிய ஒளியில் ஏற்பட்ட மாற்றம் காரணமானவே இவ்வாறானதொரு தோற்றம் உருவாகியுள்ளது என ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் உலகம் பாரிய அழிவிற்கு முகம் கொடுக்கவுள்ளது என்று பல்வேறுபட்ட செய்திகள் ஏற்கனவே வெளிவந்ததால் இது அந்த அழிவிற்கான அறிகுறியே என மதவாதிகளினால் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

அறிவியல் ஓர் கருத்தையும், மதம் ஓர் நம்பிக்கையும் வெளிப்படுத்திவருவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தத்தமது கடவுள்கள் வானில் இருந்து தோன்றியதாகவும், அழிவுக்கு முன்னர் அவர்கள் எச்சரிப்பார்கள் என மதக் கருத்துகள் காணப்படுகின்றமையினால் ஒரு தரப்பு மக்களிடையே பீதிநிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here