இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கே விடோவா!

0
130

டோகா நகரில் நடைபெற்றுவரும் கட்டார் ஓபன் டெனிஸ் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று பெட்ரா கே விடோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச தர வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் பெட்ரா கே விடோவா முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாஹியாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் கிவடோவா 3-6, 7-6, 7-3, 75 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

அத்துடன் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் காயம் காரணமாக ஹலெப் விலகியதையடுத்து கேப்ரின் முஹ்ருஷா விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அந்தவகையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பெட்ரா கே விடோவாவுடன் கேப்ரின் முஹ்ருஷா மோதவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here