மீண்டும் தமிழ் திரையுலகில் அமைரா தாஸ்தூர்!

0
109

அனேகன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ‘அமைரா தாஸ்தூர்’ இவர் தற்போது ‘ஜி.வி பிரகாஷ் குமார்’ நடிக்கவுள்ள திரைப்படத்தில் ஜி.வி க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரையுலகம் வந்துள்ள (அமைரா) ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் சமீபத்தில் ஜாக்கிஜான் படமான ‘குங் ஃபூ யோகா’ எனும் படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தானத்தின் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற படத்தில் நடிப்பதாக தெரிவிக்கபட்டது பின்னர் அத்திரைப்படம் தொடர்பாக எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

இவர் ஜி.வி பிரகாஷ் திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் ‘ஆதிக் ரவிச்சந்திரன்’ படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here