அப்பிள் நிறுவனம் மீது வழக்கு பதிவு!

0
107

ஐபோன்களின் செயற்பாட்டு வேகத்தை திட்டமிட்டு குறைத்துள்ளதாக அப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மீது தென்கொரிய நுகர்வோர் அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகள் அப்பிள் நிறுவனத்தின் மீது இதே வழக்கினைப் பதிவு செய்திருந்தது அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் தென்கொரியாவும் இணைந்துள்ளது.

அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்களின் ஆயுளை திட்டமிட்டு குறைத்துவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதோடு, புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கத் தூண்டுவதாகவும் அப்பிள் நிறுவனத்தின் மீது முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சொத்துகளை சேதப்படுத்தல் மற்றும், ஊழல் முறைப்பாடுகளும் அப்பிள் நிறுவனத்தின் பதியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது தென்கொரிய சட்ட வல்லுநர் குழு அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கினைத் தொடந்துள்ளதால் அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு அப்பிளின் வேகத்தை குறைத்துள்ளமைக்கு அந்த நிறுவனம் பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தென்கொரிய சட்ட வல்லுநர் குழு கோரியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here