இசை ஒரு போதை! இசையின் உண்மைப் பின்னணி!

0
260

ஊமையாலும் உணரக்கூடிய விடயமே இசை, அவ்வளவு ஏன் காதுகள் கேளாதவர்களும் உணர்வின் மூலம் இசையை ரசிக்க வைக்கின்றது நவீன அறிவியல்.

மனித மூளைக்கு ஒருவித போதை தரக்கூடிய இந்த இசை ஏன் அனைவருக்கும் பிடிக்கின்றது? இதற்கு அறிவியல் ரீதியான காரணம் என்ன?

பல்வேறு வகையான ஒலி அதிர்வெண்கள் (audio frequency) ஒன்றோடு ஒன்று கலந்து காதுகளில் கேட்பதே இசை எனப்படுகின்றது. காதுகள் செய்யும் செயலாக்கமே இசை. இதனை ஒரு மனிதன் கருவறையில் இருக்கும்போதே கேட்க ஆரப்பித்து விடுகின்றான்.

இசையை ரசிக்கும் போது மனித உடலில் பல்வேறுவிதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அதேபோல மூளையிலும் பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

ஒருவர் இசையை ரசிக்கும் போது அவருடைய மூளையில் டோபமீன் dopamine எனப்படும் மகிழ்ச்சி உணர்வைத் தரக்கூடிய வேதியியல் பொருள் சுரக்கின்றது.

போதைகள் நுகரும்போது ஒருவருக்கு இன்பம் கலந்த நிலை உருவாவதற்கு முலகாரணம் இந்த வேதியலே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேதியியல் neurotransmitter எனப்படும் நரம்புக்கடத்தியினூடாக உடலில் பரவுவதால் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுகின்றது.

இதேபோன்ற dopamine சுரப்பு இசையை கேட்கும் போது உருவாகின்ற காரணத்தினாலேயே இசைக்கு ஒருவர் அடிமையாக்கப்படுகின்றார். அதனால் மேலும் மேலும் இசையை கேட்க தூண்டப்படுகின்றது.

அதேபோன்று இந்த dopamine சுரப்பின் காரணமாக உடல் இயக்கங்கள் ஒரு தாள அமைவுக்கு இசைவாக தொழிற்படுகின்றது. சாதாரணமான இதயம் நிமிடத்திற்கு 72 தடவைகள் துடிக்கின்றது.

இதனை இசையின் மூலம் BPM (Beats per Minute) என அளக்கலாம் அதன்படி 72 வீதத்திற்கும் குறைவான அளவு பாடல்களை கேட்கும் போது மனம் அமைதியடையும், அதுவே 72 இற்கும் அதிக BPM பாடல்களைக் கேட்கும் போது மூளை சுறுசுறுப்படைகின்றது.

அதேபோன்று சிறுவர்களின் வளர்ச்சியையும் இசை அதிகரிக்கின்றது அதன்படி. இசையினை கேட்கும் சிறுவர்களது Intelligence Quotient அதாவது நுண்ணறிவு எண் வளர்ச்சியடைகின்றது என்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் புத்திசாலி சிறுவர்கள் உருவாவதற்கும் இசை உதவிசெய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இசை ஓர் போதை மட்டுமல்ல அறிவுக்கும் அவசியமாகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here