இந்து சமுத்திர கடல், வான் வழி பாதுகாப்புக்கு அவுஸ்திரேலியா!

0
53

இந்து சமுத்திரத்தில் கடல் மற்றும் வான் வழி பயணங்களின் பாதுகாப்புக்கு உதவுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன மலேஷிய விமானத்தை தேடும் மற்றும் மீட்புப் பணிகளின் விரிவாக்கமாக இது அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழு அதிகாரிகள், கான்பெராவில் உள்ள கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை இந்த வாரம் சந்தித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிராந்திய பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்புக் குழுவின் இணைப்பாளரான ரிக் எலன், கடந்த 2016ஆம் ஆண்டு ஐந்து இலங்கை மீனவர்களை விரைவாகவும், திறமையாகவும் அவர்களின் படகுகளுடன் மீட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக முன்னறிவித்தலை வழங்கிய அவுஸ்திரேலியா இணைய ஒளிபரப்பு ஒன்றுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த அவசர முன்னெச்சரிக்கை அமைப்பானது மூன்று நாடுகளுக்கு அப்பாலும் செயற்படுவதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here