அனைத்துவகைப் போட்டியிலும் சாதனை படைத்த வீரர்!

0
139

இந்திய வீரரான புவனேஷ்குமார் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் டெஸ்ட் போட்டியில் 4 முறையும், ஒருநாள் போட்டி மற்றும் ரி-20 போட்டியில் ஒவ்வொரு முறையும் என 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் புவனேஷ்குமார் தென்னாபிரிக்காவின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

எனவே ரி-20 இல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் அனைத்து வகைப் போட்டியிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here