சச்சினின் சாதனையை நெருங்கும் கோஹ்லி!

0
157

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், தற்போது விளையாடும் வீரர்களில் அதிக்கூடிய சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனை, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வசமே உள்ளது.

208 போட்டிகளில் விளையாடி 35 சதங்களை பெற்றுள்ள கோஹ்லி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆனால் இந்த சச்சினின் சாதனை நெடுநாட்கள் நீடிக்காது என்பதை கோஹ்லியின் அண்மைக்காலமாக நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதங்களை குவித்துவரும் கோஹ்லி, இதே திறனுடன் விளையாடி வந்தால் குறுகிய காலத்திலேயே சச்சினின் சாதனை முறியடிப்பார்.

தற்போது விளையாடும் வீரர்களில் தென்னாபிரிக்க வீரர்களான அஷிம் அம்லா 26 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும், டி வில்லியர்ஸ் 25 சதங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் 30 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய 28 சதங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here