வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளையின் தாய் கொலை!

0
525

வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளையின் தாய் கொலை!

இன்று(14)  கிளிநொச்சி வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட பகுதியில் மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாஸ்கரன் நிரோசா வயது 24 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த நேரத்தில் இக் கொலை இடம்பெற்றிருக்கிறது.

இன்று பிற்பகல் 1.00 அளவில் அவரின் வீட்டின் பின் பகுதியில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட நிலையில் உறவினர்களால் இனங்காணப்பட்ட நிலையில் கிராம மக்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி சதுரங்க தலமையிலான குழுவினரும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here