மஹிந்தவின் கை ஓங்கினால் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை!

0
170

தெற்கிலே மஹிந்தவின் கை ஓங்கி வருகின்ற நிலையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மஹிந்த அணியினர் ஆட்சிக்கு வரலாம் அவ்வாறு வந்தால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் ஒன்று இல்லாமல் போய்விடும் என தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு சில அரசியல் கட்சிகளும் உடந்தையாக செயற்படுகின்றன என குற்றஞ்சாட்டிய அருட்தந்தை சக்திவேல், அத்தகைய அரசியல் கட்சிகளை மக்கள் அடையாளம் கண்டு ஓரங்கட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே இலங்கை அரசாங்கம் முன்னெடுத்ததென குறிப்பிட்ட அவர், சர்வதேசத்தின் ஆதரவுடனேயே இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதெனவும், ஆகவே சர்வதேசமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here