மணிரத்னம் படத்தில் பிரபல மாடல்!

0
108

முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் ‘டயானா எரப்பா’ புதிதாக இணைகிறார்.

இவர் பல ஃபேஷன் ஷோக்களிலும், மிஸ் இந்தியாவிலும் கலந்து கொண்டவர்.

இவர் இந்தப் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாவது தொடர்பாக டுவிட்டரில் “என்னுடைய முதல் படமே மணி சாரின் படமாக அமைந்தது பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதில் அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் எனப் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்காக நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருகிறார் டயானா. இவரது காட்சிகள் மார்ச் மாதம் முதல் படமாக்கப்பட இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here