ஈரானில் விமான விபத்து! 66 பேர் பலி!

0
111

ஈரானில் சுமார் 66 பேருடன் பயணித்த உள்ளூர் விமானமொன்று மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், அவ்விமானத்திலிருந்த 66 பேரும் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் (Mehrabad) விமான நிலையத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புறப்பட்ட இந்த விமானம், இஸ்ஃபஹான் மாகாணத்துக்கு அருகில், தெஹ்ரானுக்கும் தென்மேற்கு யசூஜ் (Yasuj) நகருக்குமிடையிலான ஸகுரோஸ் (Zagros) மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏய்ஸ்மன் (Aseman) விமான சேவையினரினால் இயக்கப்படும் ஏ.ரி.ஆர். 72-500 எனும் இலக்கமுடைய விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 50 நிமிடங்களில் ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்துள்ள நிலையில், விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் 60 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும், இரண்டு விமானிகளும் இருந்துள்ளனர். இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

இதற்கிடையில், விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணி நடவடிக்கைக்காக, ஹெலிகொப்டரொன்றில் மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதும், தற்போது நிலவும் மூடுபனி காரணமாக மேற்படி ஹெலிகொப்டர் தரையிறங்க முடியாத நிலையிலிருந்தது. இந்நிலையில், தரைவழியாக மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here