தொழில்முறை எழுச்சிக்கு வயது ஒரு தடையல்ல!

0
81

டென்னிஸ் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தொழில்முறை வாழ்க்கை எழுச்சிக்கு வயது ஒரு தடையாக அமையாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

36 வயதான ரோஜர் பெடரர் ஐந்து வருடங்களுக்கும் மேலான போராட்டத்தின் பின்னர் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தாலும் அதற்காக அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

இறுதியான நடைபெற்ற ஐந்து கிறான்ஸ்லாம் போட்டிகளில் மூன்றில் ரோஜர் பெடரர் பெற்றுக் கொண்ட சம்பியன் கிண்ணமே தரவரிசையில் அவரை முதல்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

உலகத்தரவரிசையில் முதலிடம் வகித்த வீரர்களில் அதிகூடிய வயதுடைய வீரர் இவர் என்பதே சிறப்பம்சாக உள்ளது.

முன்னதாக 33 வயதில் ஆன்ட்ரே ஆகாஸி தரவரிசையில் முதலிடத்தை பெற்றிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெடரர், ‘ 36 வயதில் முதலிடத்தை பெற்றுள்ளேன். 37 ஆவது வயதில் முழுமையான கனவு நிறைவேறும்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here