எதிர்பாராத சம்பவங்களே இன்று உலகை ஆட்டிப்படைக்கின்றன!

0
115

தற்போதைய உலகம் ஆச்சரியத்தோடு கூடிய அறிவியலில் பயணிக்கின்றது என்பது உண்மை. எனினும் இதில் தற்போது உலகை ஆட்டுவிக்கும் பல கண்டுபிடிப்புகளுக்கும் தற்செயலுக்கும் தொடர்புகள் உண்டு.

அதாவது எதையோ உருவாக்கச்சென்று அதனால் தற்செயலாக எதிர்பாராமல் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் பல உள்ளன. அந்தவகையில் உலகின் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நெகிழி (பிளாஸ்டிக்) எதேச்சையாகவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

907ஆம் ஆண்டு Leo Baekeland எனும் ஆய்வாளர் செயற்கை பிசின் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் இதன்போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதே இப்போது உலகை ஆட்டுவிக்கும் நெகிழி.

Constantin Fahlberg எனப்படும் இரசாயனவியலாளர் 1878ஆம் ஆண்டுகளில் ஒருசமயம் தன் ஆராய்ச்சி முடிந்தவுடன் கைகளை சுத்தப்படுத்த மறந்துவிடுகின்றார். வீடு சென்று தற்செயலாக கைகளில் இனிப்புச் சுவை இருப்பதை அறிந்து கொள்கின்றார்.

இதன்காரணமாக கண்டுபிடிக்கப்பட்டதே கரும்பைவிடவும் அதின இனிப்புச் சுவைமிக்க சாக்கரின் (saccharin) எனப்படும் செயற்கை இனிப்பூட்டி.

இன்றைய மருத்துவ உலகிற்கு மிக அவசியமான பெனிசிலின் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பியும்கூட தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றே.

1928ஆம் ஆண்டு Alexander Fleming எனப்படும் ஆய்வாளர், இன்ஃபுளுவென்சா எனப்படும் வைரல் தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். இதன்போது Staphylococcus எனப்படும் வைரஸ் அடங்கிய தட்டினை முறையாக மூடாமலே ஆய்வு கூடத்தினை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த வைரஸ் தட்டு மூடப்படாமல் இருந்ததை அவதானித்து வைரஸ் தாக்கம் பரவாதிருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஆபத்தான வைரசுகள் தட்டில் பூஞ்சை எனப்படும் பங்கசுகள் படிந்திருந்த இடத்தில் மட்டும் பரவாமல் ஏனைய இடங்களில் படர்ந்திருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த தற்செயல் சம்வத்தின்காரணமாகவே antibiotic நுண்ணுயிர் எதிர்ப்பி கண்டுபிடிக்கப்பட்டு இன்று பல்வேறு நோய்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது.

அதிவேக சமையலுக்காக அனைத்து வீடுகளையும் ஆக்ரமித்துள்ள நுண்ணலை அடுப்பு (Micro wave oven) அடுப்பு கண்டுபடிக்கப்பட்டது சுவாரசியமான விடயம்.

Percy Spencer எனப்படும் ஆய்வாளர் 1945 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் காற்சட்டைப் பாக்கற்றில் வைத்திருந்த சாக்லேட் உருகியதை அவதானித்துள்ளார். அப்போது அவர் சிந்தையில் உதித்த கண்டுபிடிப்பே இந்த நுண்ணலை அடுப்பு.

இதுபோன்று இன்னும் பல அதாவது இன்றைய நவீன உலகத்திற்கு அத்தியவசியமான கண்டுபிடிப்புகள் பல கடந்தகாலத்தில் எதேச்சையாக திட்டமிடப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here