இந்திய கிரிக்கெட்டின் செல்லப்பிள்ளை ஓய்வு!

0
138

இந்தியக் கிரிக்கெட் அணியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்படும் சுரேஸ் ரெய்னா, சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருடன் அவர் விடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடற்தகுதி மற்றும் அணியில் சோபிக்காததன் காரணமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சுரேஸ் ரெய்னா, தற்போது ரி-ருவென்ரி போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் அவர் சிறப்பாக பிரகாசித்தால், மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here