சிரியாவில் கடும் மோதல்! 94 பேர் பலி!

0
106

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கௌட்டாவில் (Ghouta) படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களில், 94 பேர் உயிரிழந்ததுடன், 325 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) படையினர் விமானத் தாக்குதல், ரொக்கட் தாக்குதல் மற்றும் ஷெல்த் தாக்குதல்களை நடத்தியதாகவும், இவற்றில் அகப்பட்டு 20 சிறுவர்கள் உட்பட 94 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 325 பேர் படுகாயமடைந்ததாகவும் , ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மேற்படி பகுதியில் தரைவழித் தாக்குதலை முன்னெடுக்க ராணுவத்தினர் தயாராகி வருவதாகவும், ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கிழக்கு கௌட்டாவில் நிலைமை மோசமடைந்துவரும் நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

போராளிக் குழுவினரின் புகலிடமாகக் காணப்படும் கௌட்டாவில், சுமார் 4 லட்சம் பேர் வசித்துவரும் நிலையில், படையினருக்கும் போராளிக் குழுவினருக்குமிடையிலான மோதல் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here